ADDED : ஆக 09, 2011 01:25 AM
தேனி : ஆண்டிபட்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில், கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் கோபா, டிடிபிஓ, துணி வெட்டுதல் மற்றும் தையல் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.
முஸ்லிம்கள் 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரலாம்.
கம்ப்யூட்டர் பிரிவுகளான கோபா டிடிபிஓ., பிரிவுகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பங்களை நேரடியாக இந்நிலையத்தில் பெற்று நேரடி சேர்க்கையில் பங்கேற்கலாம், என ஐ.டி.ஐ., நிர்வாகம் தெரிவித்துள்ளது.


