மாஜி அமைச்சரின் உதவியாளர் தற்கொலை?
மாஜி அமைச்சரின் உதவியாளர் தற்கொலை?
மாஜி அமைச்சரின் உதவியாளர் தற்கொலை?
UPDATED : ஜூலை 25, 2011 12:36 AM
ADDED : ஜூலை 25, 2011 12:23 AM
சேலம்:சேலத்தில் தி.மு.க.,வினர் மிரட்டியதால், , மாஜி அமைச்சரிடம் உதவியாளராக இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேலம் போலீஸ் கமிஷனருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.சேலம், நிலவாரப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நேற்று இரவு, சேலம் போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:சேலம், அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் நடேசன்(60).
மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் உதவியாளராக பணியாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன், வீரபாண்டி ஆறுமுகம் மீது, நிலம் அபகரிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நில அபகரிப்பு பிரிவு போலீசார், நடேசனிடமும் விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில், தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் போனில் தொடர்பு கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், மனம் உடைந்த நடேசன், தூக்கமாத்திரை தின்று, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.எனவே, அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.