/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடிநீர் திட்ட பணிகள் இயக்குனர் ஆய்வுகுடிநீர் திட்ட பணிகள் இயக்குனர் ஆய்வு
குடிநீர் திட்ட பணிகள் இயக்குனர் ஆய்வு
குடிநீர் திட்ட பணிகள் இயக்குனர் ஆய்வு
குடிநீர் திட்ட பணிகள் இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 05, 2011 02:34 AM
சென்னை : அம்பத்தூர் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று திட்டப் பணிகளை, சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் கோபால் ஆய்வு செய்தார்.அம்பத்தூர் நகராட்சியில், 220.97 கோடி மதிப்பீட்டில், 26 கழிவுநீரேற்று நிலையம் மற்றும் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகளும், 268 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 22 மேல்நிலைத் தொட்டி மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.மேற்கு ஜே.ஜே., நகர் பாரதி சாலையில் நடைபெற்றுவரும், கழிவுநீரகற்று நிலையக் கட்டுமானப் பணிகளை அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும், மேல்நிலைத் தொட்டி மற்றும் நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பணிகளை பார்வையிட்ட சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் கோபால், முகப்பேர் மேற்குப் பகுதியில் நீரேற்று நிலையத்தினையும், லாரிகளில் நீர் நிரப்பப்படுவதையும் ஆய்வு செய்தார்.