/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாணவியிடம் சில்மிஷம் ஒருவர் அதிரடி கைதுமாணவியிடம் சில்மிஷம் ஒருவர் அதிரடி கைது
மாணவியிடம் சில்மிஷம் ஒருவர் அதிரடி கைது
மாணவியிடம் சில்மிஷம் ஒருவர் அதிரடி கைது
மாணவியிடம் சில்மிஷம் ஒருவர் அதிரடி கைது
ADDED : செப் 20, 2011 01:12 AM
பள்ளிபாளையம்: பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த, பெட்டிக்கடை உரிமையாளரை, பள்ளிபாளையம் போலீஸார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம், சத்யா நகரைச் சேர்ந்தர் நெசவுத் தொழிலாளி சீனிவாசன். அவரது மகள் ஜெயசுதா(13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அவர், தனது வீட்டுக்கு அருகே உள்ள ஜனார்த்தன் (43) என்பவரது பெட்டிக் கடைக்கு மிட்டாய் வாங்கச் செல்வது வழக்கம். நேற்று மாலை ஜெயசுதா, பெட்டிக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மிட்டாய் கொடுத்த ஜனார்த்தன், கடைக்கு பின்னால் இருக்கும் வீட்டுக்கு ஜெயசுதாவை அழைத்துள்ளார். வீட்டுக்குள் சென்ற ஜெயசுதாவிடம், ஜனார்த்தன், 'சில்மிஷ' வேலையில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியில் வெளியே ஓடி வந்த ஜெயசுதாவை, அக்கம் பக்கத்தினர் பார்த்து விசாரித்துள்ளனர். அப்போது, ஜனார்த்தன் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த ஜெயசுதாவின் தந்தை சீனிவாசன், பள்ளிபாளையம் போலீஸில் புகார் செய்தார். ஜனார்த்தனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


