மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்: பள்ளி முற்றுகை
மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்: பள்ளி முற்றுகை
மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிஷம்: பள்ளி முற்றுகை
ADDED : செப் 21, 2011 10:14 AM
நாமக்கல்: பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து , பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தோவக்கவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நெசவாளர் காலனியில் , துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது.
இங்கு பயிற்சி ஆசிரியராக வந்த விட்டபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற ஆசிரியர், அங்கு படிக்கும் 5-ம் வகுப்பு, 2-ம் வகுப்பு மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்களை தனது கேமிரா மொபைல் போனில் படம் எடுத்து வைத்துள்ளார். மேலும் மற்ற மாணவிகளிடம் இதே போன்று தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகளின் பெற்றோருக்கு விஷயம் தெரியவர, பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் மாணிக்கத்தை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர்.