/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோபாலவல்லிதாசர் உபன்யாசம்தூத்துக்குடியில் நாளை துவக்கம்கோபாலவல்லிதாசர் உபன்யாசம்தூத்துக்குடியில் நாளை துவக்கம்
கோபாலவல்லிதாசர் உபன்யாசம்தூத்துக்குடியில் நாளை துவக்கம்
கோபாலவல்லிதாசர் உபன்யாசம்தூத்துக்குடியில் நாளை துவக்கம்
கோபாலவல்லிதாசர் உபன்யாசம்தூத்துக்குடியில் நாளை துவக்கம்
ADDED : அக் 09, 2011 02:36 AM
தூத்துக்குடி:தூத்துக்குடியில் குருஜி கோபாலவல்லிதாசர் உபன்யாசம் நாளை துவங்குகிறது. வரும் 13ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி வைகுண்டபதி
பெருமாள் கோயிலில் தற்போது புரட்டாசி சனிக்கிழமை விழா கோலாகலமாக மூன்று வார
சனிக்கிழமை நடந்தது.வரும் 16ம் தேதி நான்காம் புரட்டாசி சனிக்கிழமை விழா
கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கி விட்டன. 4ம்
சனிக்கிழமை விழாவில் 5 கருடசேவை நடக்கிறது.பெருமாள் ஐந்து அவதாரங்களில் ஒரே
நேரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அற்புத நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று காலையில் இருந்து இரவு வரை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 7 வகையான
பிரசாதங்கள் தொடர்ச்சியாக உபயதாரர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.நான்காம்
கருடசேவை விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால்
அதற்கு முன் கூட்டியே செய்ய வேண்டிய ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி
ராஜேந்திரன், தக்கார் கசன்காத்தபெருமாள், அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும்
கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஐந்து
கருடசேவை விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக குருஜி கோபாலவல்லிதாசர் சுவாமியின்
உபன்யாசம் நடக்கிறது. ஸ்ரீ பக்த பிரகலாதன் என்னும் தலைப்பில் நாளை (10ம்
தேதி) முதல் 13ம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. கோயில்
வளாகத்தில் இரவு 7 மணி முதல் உபன்யாசம் நடக்கிறது.உபன்யாச நிகழ்ச்சியில்
தூத்துக்குடியில் உள்ள ஆன்மிக அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு
கோபாலவல்லிதாசரின் சொற்பொழிவினை கேட்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில்
பக்தர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.


