Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு காங்., மாநில தலைவர் தங்கபாலு : சகோதரி மீது கலெக்டரிடம் புகார்

போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு காங்., மாநில தலைவர் தங்கபாலு : சகோதரி மீது கலெக்டரிடம் புகார்

போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு காங்., மாநில தலைவர் தங்கபாலு : சகோதரி மீது கலெக்டரிடம் புகார்

போலி பத்திரம் தயாரித்து நில அபகரிப்பு காங்., மாநில தலைவர் தங்கபாலு : சகோதரி மீது கலெக்டரிடம் புகார்

ADDED : ஜூலை 30, 2011 01:02 AM


Google News

சேலம்: தமிழக காங்., கட்சி தலைவர் தங்கபாலுவின் சகோதரி உள்பட இருவர் போலி பத்திரம் தயாரித்து, நிலத்தை அபகரித்து கொண்டதாக, சேலம் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



சேலம்.

திருச்சி மெயின் ரோடு, தாதகாப்பட்டியை சேர்ந்த செலம்மாள் என்பவர் சேலம் கலெக்டர் மகரபூஷணத்திடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனது கணவர் வேலு, மத்திய அரசின் கடற்படை பிரிவில் பணியாற்றி வந்தார். அவரது சேவையை பாராட்டி, கடற்படை பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசின் நிலவருவாய் ஆணையம், எங்களுக்கு சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா உமையாள்புரம் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. பட்டா எனது கணவரின் பெயரில் உள்ளது.



எங்களின் நிலத்துக்கு அருகில் வசிக்கும் அதியமான், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலுவின் சகோதரி சிவகாமி ஆகியோர் போலியாக பத்திரம் தயாரித்து, நிலத்தை ஆக்கிரமித்து, அபகரித்து கொண்டனர். இந்த பிரச்னை சம்பந்தமாக, ஆத்தூர் முனிசீப் நீதிமன்றத்தில் எனது கணவர் வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தில் நிலம் எங்களுக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை மதிக்காமல், எங்கள் நிலத்துக்கு செல்ல விடாமல், ஆட்களை அழைத்து வந்து, மிரட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகின்றனர். இவர்களிடம் இருந்து எங்கள் நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். போலி பத்திரம் தயாரித்து நிலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செல்லம்மாள் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us