/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேதம் அடைந்த கிணறுகளுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்சேதம் அடைந்த கிணறுகளுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்
சேதம் அடைந்த கிணறுகளுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்
சேதம் அடைந்த கிணறுகளுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்
சேதம் அடைந்த கிணறுகளுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்
ADDED : ஆக 01, 2011 04:14 AM
பனமரத்துப்பட்டி: 'மழையினால் சேதம் அடைந்த கிணறுகளை , வேளாண்மை பொறியியல்
துறை மூலம் சர்வே எடுத்து, பல ஆண்டுகள் ஆகியும் நிதி உதவி வழங்காமல்
உள்ளது. கிணறுகளை சீரமைக்க, சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு நிதியுதவி
வழங்க வேண்டும்' என, பனமரத்துப்பட்டி ஏரி பாதுகாப்பாளர் சங்கம் சார்பில்,
மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.பனமரத்துப்பட்டி பகுதியில்,
விவசாயம் பிரதான தொழிலாக நடந்து வருகிறது. விவசாயிகள் பெரிய அகலமான
கிணறுகளை தோண்டி, அதில் இருந்து தண்ணீர் எடுத்து வயலுக்கு நீர் பாய்ச்சி
வருகின்றனர். சிறு விவசாயிகளின் கிணறுகளில் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்ட்
கலவை மூலம் கருங்கல் கட்டிடம் அமைக்காமல் மண் சுவர்களாக
உள்ளது.மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பும் சமயத்தில், நிலத்தடி
நீர் மட்டம் அதிகரித்து, விவசாய கிணறுகளில் நீர் ஊற்றுகள் தோன்றும். அந்த
சமயங்களில் கிணற்றின் பக்கவாட்டு மண் சுவர்களில் நீர் ஊற்றுகள் ஏற்பட்டு,
சுவர்கள் இடிந்து விழுகின்றன. மழையினால் இடிந்து விழுந்த பல கிணறுகள்
சீரமைக்காமல் உள்ளதால், தண்ணீர் இன்றி பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள்
பாதிப்பு அடைந்துள்ளனர்.
பனமரத்துப்பட்டி ஏரி பாதுகாப்பாளர் சங்க தலைவர்
சண்முகம், மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:கடந்த சில ஆண்டுகளுக்கு
முன் பெய்த கனமழையால், பனமரத்துப்பட்டி ஏரி, நத்தமேடு ஏரி, அம்மாபாளையம்
ஏரி ஆகிய இடங்களை சுற்றி உள்ள விவசாய கிணறுகளின் பக்கவாட்டு சுவர்கள்
இடிந்து, மின் மோட்டார், பைப் உள்ளிட்டவை மண்ணில் புதைந்தது.சேலம் வேளாண்மை
பொறியியல் துறை மூலம் மழையினால் சேதம் அடைந்த விவசாய கிணறுகள் குறித்து
புள்ளிவிபரம் சேகரிக்கப்பட்டது. ஆனால், இது வரையில், கிணறுகளை சீரமைக்க
அரசு நிதி உதவி வழங்க வில்லை. சேதம் அடைந்த கிணறுகளை சீரமைக்க சிறு, குறு
விவசாயிகளால் முடியாத நிலை உள்ளது.மழையினால் சேதம் அடைந்த விவசாய கிணறுகளை
சீரமைக்க, விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.