/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நள்ளிரவில் கார் எரிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்நள்ளிரவில் கார் எரிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்
நள்ளிரவில் கார் எரிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்
நள்ளிரவில் கார் எரிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்
நள்ளிரவில் கார் எரிப்பு மர்ம நபர்கள் அட்டூழியம்
ADDED : ஆக 03, 2011 01:17 AM
கோவை : கோவை நகரில், நள்ளிரவில் ஆம்னி வேனுக்கு தீ வைத்த நபரை போலீசார் தேடுகின்றனர்.
கோவை, ராமநாதபுரம், திருவள்ளுவர் நகரிலுள்ள சுப்பையா தேவர் காலனியைச் சேர்ந்தவர் சம்பத்குமார். நேற்று முன்தினம் இவர் தனது ஆம்னி வேனை வீட்டு முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவு 1.00 மணியளவில் அங்கு சென்ற மர்ம நபர்கள், வேனுக்கு தீ வைத்துவிட்டு தப்பிவிட்டனர். ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். வாகன எரிப்பு சம்பவங்கள் இதற்கு முன் ஆர்.எஸ். புரம், பீளமேடு, சிங்காநல்லூர், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்துள் ளன. மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'வாகன எரிப்பு சம்பவம், மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கிறாம். சம்பந்தப்பட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார்' என்றார்.