/உள்ளூர் செய்திகள்/சேலம்/வழிப்பறி திருடர்கள் ஏழு பேர் அதிரடி கைதுவழிப்பறி திருடர்கள் ஏழு பேர் அதிரடி கைது
வழிப்பறி திருடர்கள் ஏழு பேர் அதிரடி கைது
வழிப்பறி திருடர்கள் ஏழு பேர் அதிரடி கைது
வழிப்பறி திருடர்கள் ஏழு பேர் அதிரடி கைது
சேலம்: தனியார் நிறுவன சூப்பர்வைஸரை தாக்கி, பணத்தை வழிப்பறி செய்த ஏழு பேரை, தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாநகர கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் ரவீந்திரன் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுப்ரமணியன் தலைமையில், செவ்வாய்ப்பேட்டை போலீஸாரை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 4.15 மணிக்கு குகை மாரியம்மன் கோவில் அருகே ரங்கி தெருவில், ஒரு பல்சர் பைக்கில் வந்த திருச்செங்கோடு லிங்கேஸ்வரன் (36), ஓமலூர் விஜயகுமார் (23), திருச்செங்கோடு சிலோன்காலனியை சேர்ந்த வசந்தராஜ் (24) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் காந்தி ஸ்டேடியம் மேம்பாலம் அருகில், பணத்தை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அழகாபுரம் ராஜ்குமார் (23), தோப்புக்காடு வினோத்குமார் (24), சின்ன மாவீரன் (23), மணியனூர் ராஜா (43) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, ஐந்து லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.