/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகைபெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை
பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை
பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை
பெருமாள் கோவிலில் திருப்பாவாடை தளிகை
ADDED : செப் 25, 2011 01:44 AM
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி
மகோற்சவத்தை முன்னிட்டு பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை தீபாராதனை
நடந்தது.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மகோற்சவத்தை
முன்னிட்டு நேற்று காலை 4 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு
திருப்பாவை சாற்றுமறை, 7.30 மணிக்கு மகாசாந்தி ஹோமம், ஸ்ரீ தேவி பூதேவி
சமேத தேகளீச பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம், 11 மணிக்கு திருக்கல்யாண
வைபவம், விசேஷ திருப்பாவாடை தளிகை தீபாராதனை நடந்தது. கதம்பசாதம்
பெருமாளுக்கு சமர்பித்து பக்தர்களுக்கும் பரிமாறப்பட்டது.
ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரியர் சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவில்
பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி வீதி புறப்பாடு, 7
மணிக்கு ஊஞ்சல் சேவை, 8 மணிக்கு சாற்றுமறை, 9 மணிக்கு ஆஸ்தானம்
எழுந்தருளினார். மூலவர் பெருமாள் திருவாபரண அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


