/உள்ளூர் செய்திகள்/கரூர்/குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
இதேபோல் பட்டுக்கோட் டை வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு விபத்து நிவாரண உதவித் தொகைய ரூபாய் 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. தஞ்சாவூர் பஞ்சாயத்து யூனியன் ஆலக்குடி பஞ்சாயத்தி ல் பணிபுரிந்து இறந்த மகாலிங்கம் மனைவி மலர்கொடிக்கும், காசநாடுபுதூர் பஞ்சாயத்தில் பணியாற்றி இறந்த சைவராஜ் மனைவி வசந்தாவுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகளை கலெக்டர் பாஸ்கரன் வழங்கினார்.
மேலும் மகளிர் திட்டத்தின் சார்பில் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, திருவோணம், பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாச்சத்திரம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 16 பஞ்சாயத்துக்குழு கூட்டமைப்புகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் மொத்தம் 16 லட்சம் மதிப்பிலான உதவித் தொகைகளுக்கான காசோலைகளையும், கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த ஒன்பது பயனாளிகளுக்கு நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் ரூபாய் பத்தாயிரம் வீதம் உதவித் தொகைகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
திருவிடைமருதூர் வட்டத்தை சேர்ந்த 30 பயனாளிளுக்கு புதிய ரேஷன் கார்டுகளையும், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த ஒரு பயனாளிக்கு இலவச தையல் இயந்திரமும், பட்டுக்கோட்டை வட்டத்தை சேர்ந்த மூன்று பயனாளிகளுக்கு ரூபாய் 10 ஆயிரத்து ஐம்பது மதிப்பிலான இலவச சலவை பெட்டிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், ஆகிய வட்டங்களை சேர்ந்த 49 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 100 மதிப்பிலான ஆக மொத்தம் ரூபாய் 22 லட்சத்து 62 ஆயிரத்து 150 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரன் வழங்கினார்.
டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், கö லக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்ரமணியன், சமூக பாதுகாப்புத்திட்டம் ரவிக்குமார், பிற்பட்டோர் நல அலுவலர் எல்லப்பன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஜேம்ஸ் செல்லய்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், மாற்றுத்திறனாளி நல அலுவலர் கலியமூர்த்தி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.