ADDED : ஆக 26, 2011 01:35 AM
சென்னை : ''மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, உண்மையுடன் வாழ வேண்டும்'' என, மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி.தத்தார் பேசினார்.
சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 40வது ஆண்டு விழா நடந்தது. விழாவில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. தத்தார் பேசும்போது,' இளைய சமுதாயத்தினர், வாழ்வில் வெற்றி பெற உயர்ந்த எண்ணம், ஆற்றல் மிகு பயிற்சி, தனித்தன்மை உள்ளிட்ட ஏழு வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில், வெற்றி என்பது தவிர்க்க முடியாதது. எனவே, கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மாணவர்கள் உண்மையுடன் வாழ வேண்டும்'' என்றார். மேலும், விழாவில் 'சுதா சந்தியா' என்ற தலைப்பில் நடைபெற்ற, கலை நிகழ்ச்சிகளில், சிறப்பாக விளங்கிய மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.டி.ஏ.வி., பள்ளி முதல்வர் உஷா, செயலர் ஜெயதேவ் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.