சிலையில் இருந்த தங்க தாலி திருட்டு
சிலையில் இருந்த தங்க தாலி திருட்டு
சிலையில் இருந்த தங்க தாலி திருட்டு
ADDED : ஆக 27, 2011 11:38 PM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த கீழபாண்டி சாந்தகுணம் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து பூட்டை உடைத்து கோவில் உற்சவர் சிலையை திருடி அதன் கழுத்தில் இருந்து ஒன்றரை பவுன் தாலியை மட்டும் திருடிக் கொண்டு சிலையை வயல் வெளியில் போட்டு விட்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து கோவில் நிர்வாகி ராஜரவிச்சந்திரன் எடையூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். கோவிலுக்குள் புகுந்து சாமி சிலையில் இருந்த தங்கத்தாலியை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


