Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பழனிவேல்ராஜன் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை

பழனிவேல்ராஜன் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை

பழனிவேல்ராஜன் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை

பழனிவேல்ராஜன் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை

ADDED : செப் 27, 2011 09:35 PM


Google News

கூடலூர் : பெரியாற்றில் இருந்து பழனிவேல்ராஜன் கால்வாயில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லோயர்கேம்பில் இருந்து, போடி மீனாட்சிபுரம் வரை உள்ள பழனிவேல்ராஜன் கால்வாய் மூலம், 50 ஆயிரம் ஏக்கர் மானாவாரி விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் உள்ளது. இக்கால்வாய்க்கு லோயர்கேம்ப் பெரியாற்றில் இருந்து நீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு 100 நாட்கள் திறந்து விடப்பட்டதால், இக்கால்வாய் மூலம் 59 குளங்கள் நிரம்பின. கால்வாயில், செப்.16 முதல், அக்.15 வரை 30 நாட்கள் நீர் திறக்க ஏற்கனவே அரசு ஆணை உள்ளது. தற்போது பெரியாறு அணையில் நீர் இருப்பு தேவையான அளவில் உள்ளதால், இக்கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிவேல்ராஜன் கால்வாய் விவசாய சங்க தலைவர் ராமராஜ், ஐந்து மாவட்ட விவசாய சங்க செயலாளர் அப்பாஸ் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us