/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தரம் உயரும் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலி இடம் : மாணவர்கள் பாதிப்புதரம் உயரும் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலி இடம் : மாணவர்கள் பாதிப்பு
தரம் உயரும் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலி இடம் : மாணவர்கள் பாதிப்பு
தரம் உயரும் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலி இடம் : மாணவர்கள் பாதிப்பு
தரம் உயரும் பள்ளிகளில் ஆசிரியர்கள் காலி இடம் : மாணவர்கள் பாதிப்பு
ADDED : அக் 03, 2011 10:56 PM
விருதுநகர் : தமிழகத்தில் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் ஏற்படும், ஆசிரியர் காலிப்பணியிடங்களால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டில் 544 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த பள்ளிகளுக்கு தலா ஏழு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவர் என அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த பள்ளிகளிலேயே பணியாற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று, பணியிடம் பெறுகின்றனர். இவர்களது காலிப்பணியிடங்களை அரசு காட்டாததால், அந்த பணியிடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்கள் பாதிக்கின்றனர். இதன் மீது அரசு நடவடிக்கை எடுத்து, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.


