/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போலீஸார் இடமாறுதலுக்கு பின் திருட்டு அதிகரிப்புபோலீஸார் இடமாறுதலுக்கு பின் திருட்டு அதிகரிப்பு
போலீஸார் இடமாறுதலுக்கு பின் திருட்டு அதிகரிப்பு
போலீஸார் இடமாறுதலுக்கு பின் திருட்டு அதிகரிப்பு
போலீஸார் இடமாறுதலுக்கு பின் திருட்டு அதிகரிப்பு
ADDED : ஜூலை 27, 2011 12:39 AM
கோபிசெட்டிபாளையம்:போலீஸார் இடமாறுதலுக்கு பிறகு, கோபியில் திருட்டு அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் சமீபத்தில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் இடமாற்றப்பட்டனர். கோபி ஸ்டேஷனில் மட்டும் 42 போலீஸார் மாறுதலாகினர். போலீஸார் இடமாற்றத்துக்கு பிறகு, கோபி நோக்கி திருடர்கள் படையெடுத்துள்ளனர். சமீப காலமாக கோபி பகுதியில் திருட்டுகள் அதிகரித்துள்ளன. நடப்பு மாதத்தில் தொடர்ச்சியாக திருட்டு நடந்துள்ளது.
கோபி மொடச்சூர் திரு.வி.க., நகரை சேர்ந்த சீனிவாசன் மனைவி பூமதி(39), தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்கள் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்று பவுன் நகை திருடப்பட்டது. கோபி கச்சேரிவீதி கன்னிகா பரமேஸ்வரி வீதியை சேர்ந்த பாலமுருகன்(45); சமையல் எண்ணெய் ஏஜன்ஸி நடத்துகிறார். இவரது வீட்டில் 26 பவுன் நகை, 5,000 ரூபாய் மதிப்பிலான வெள்ளி மற்றும் 22 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டது. வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோபி ஸ்லேட்டர் ஹவுஸ்வீதியை சேர்ந்தவர் ஜெயசீலன்(44), தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி காயத்திரி(39); அரசு பள்ளி ஆசிரியர். இவர்களது வீட்டில் 12 பவுன் தங்கம், 5,500 ரூபாய் ரொக்கம் திருடப்பட்டது. தற்போது மீண்டும் பேராசிரியர் ஒருவரது வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் கோபி பகுதி மக்களை பீதியடையச் செய்துள்ளது. கோபி ஜி.எல்.ஆர்., லட்சுமி நகரை சேர்ந்தவர் மகுடேஸ்வரன்(51); கோபி கலைக்கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி õந்திதேவி; அரசு பள்ளி ஆசிரியை. இவர்கள் இருவரும் சென்னை சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5,000 ரூபாய் ரொக்கம், வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த, 'மாருதி ஜென்' கார் திருடப்பட்டது. தொடர் திருட்டு சம்பவத்தால் கோபி பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தீவிர ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டால் மட்டுமே திருடர்களை பிடிக்க முடியும். திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பரா கோபி போலீஸார்?


