Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நிதியின்றி மந்தநிலையில் இடைநிலை கல்வி திட்டம்

நிதியின்றி மந்தநிலையில் இடைநிலை கல்வி திட்டம்

நிதியின்றி மந்தநிலையில் இடைநிலை கல்வி திட்டம்

நிதியின்றி மந்தநிலையில் இடைநிலை கல்வி திட்டம்

ADDED : ஆக 21, 2011 11:59 PM


Google News
ராமநாதபுரம் : தமிழகத்தில் கல்வி துறை மூலம் செயல்பட்டு வரும் இடைநிலை கல்வி திட்டம் நிதியின்றி மந்தநிலையில் செயல்படுகிறது.அனைவருக்கும் கல்வி திட்டத்தை தொடர்ந்து இடைநிலை கல்வி திட்டம் துவங்கப்பட்டது. திட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு, உயர்கல்வி தொடர பள்ளி வசதி இல்லாததால், கல்வி இடையில் நின்றுவிடக்கூடாது, என்ற நோக்கத்தில் ஒரு கி.மீ., தூரத்தில் தொடக்கப்பள்ளி, மூன்று கி.மீ.,ல் நடுநிலை பள்ளி, ஐந்து கி.மீ., தூரத்தில் உயர்நிலை பள்ளி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இடைநிலை கல்வி திட்ட அலுவலர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்து சர்வே எடுத்தனர். இதில் 2009-10ம் ஆண்டு அறிக்கையின்படியான பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதன்பின் அனுப்பட்டு அறிக்கைகளுக்கு, ஒரு ஆண்டாக உரிய உத்தரவை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் சமச்சீர் கல்வி குறித்த சர்ச்சையால், இத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு என்ன பயிற்சி அளிப்பது, என தெரியாமல் செயல்பாடின்றி உள்ளனர்.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''விரைவில் நிதிகள் ஒதுக்கப்பட்டு ஒன்பது, பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான சமச்சீர் கல்வி தொடர்பான பயிற்சி வழங்கப்படும். தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் பட்டியலின்படி தரம் உயர்த்தி கட்டடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us