ADDED : ஆக 09, 2011 01:25 AM
தேவதானப்பட்டி : பெரியகுளம் தாலுகா விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு 119 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வடுகபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைத் தலைவர் ராமநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாய சங்க தாலுகா செயலாளர் முருகன், தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் வீரபாண்டி நன்றி கூறினார்


