Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வங்கி அதிகாரியை தாக்கிய தி.மு.க., துணை சேர்மன் கைது

வங்கி அதிகாரியை தாக்கிய தி.மு.க., துணை சேர்மன் கைது

வங்கி அதிகாரியை தாக்கிய தி.மு.க., துணை சேர்மன் கைது

வங்கி அதிகாரியை தாக்கிய தி.மு.க., துணை சேர்மன் கைது

ADDED : ஆக 19, 2011 03:50 AM


Google News
திருக்கோவிலூர் அருகே கூட்டுறவு வங்கி செயலாளரை தாக்கிய தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றியக்குழு துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.

திருக்கோவிலூர் ஒன்றியக்குழு துணைத் தலைவராக ராஜகோபால் உள்ளார். செங்கனாங்கொல்லை ஒன்றியக் குழு உறுப்பினரான இவர், ஜி.அரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு சென்றார். வங்கி செயலாளர் கமலக்கண்ணனிடம், கிளியரிங் சர்ட்டிபிகேட் வேண்டும் எனக் கேட்டார். அவரது பெயரில் 44 ஆயிரம் ரூபாய் நிலுவைத்தொகை (ஓவர் டியூ) உள்ளதால் கிளியரிங் சர்ட்டிபிகேட் தர இயலாது என கமலக்கண்ணன்

கூறினார்.ஆத்திரமடைந்த ராஜகோபால் வங்கி செயலாளரை திட்டி தாக்கினார். நிலைகுலைந்து போன அவரை வங்கி ஊழியர்கள் தடுத்து காப்பாற்றினர்.

இது குறித்து வங்கி செயலாளர் கமலக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று காலை 6 மணிக்கு ராஜகோபாலை கைது செய்தனர்.தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறியதையடுத்து, உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் போலீசார் அவரை சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து உடல்நிலை சாதாரண நிலையில்(நார்மல் கண்டிஷன்) இருப்பதாக சான்றிதழ் அளித்ததையடுத்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருக் கோவிலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us