/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மருந்து வணிகர்கள் எம்.பி.,யிடம் மனுமருந்து வணிகர்கள் எம்.பி.,யிடம் மனு
மருந்து வணிகர்கள் எம்.பி.,யிடம் மனு
மருந்து வணிகர்கள் எம்.பி.,யிடம் மனு
மருந்து வணிகர்கள் எம்.பி.,யிடம் மனு
ADDED : ஜூலை 26, 2011 09:33 PM
கோவை : மருத்துவ சட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள ஷெட்யூல்டு எச்.எக்ஸ்., என்ற பிரிவின் தீமைகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு, எம்.பி., நடராஜனிடம், மாவட்ட மருந்து வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் சேதுராமன், செயலாளர் காசிராமன் ஆகியோர் எம்.பி., நடராஜனிடம் கொடுத்துள்ள மனு விவரம்:மருத்துவ சட்டத்தில் ஷெட்யூல்டு எச்.எக்ஸ்., என்ற கடும் கட்டுப்பாட்டுடன் இணைக்கும் பிரிவு வெளியிடப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் மருந்துகள் (ஆன்டிபயாடிக்) அனைத்து மருந்து கடைகளிலும் தற்போது கிடைக்கிறது. ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த வரைவு மசோதாவில் 16 வகையான உயிர்காக்கும் மருந்துகள் மிகப்பெரிய மருத்துவமனைகளில் (டெரிடோரியல் மருத்துவமனைகள்) மட்டும்தான் கிடைக்கும்; தமிழகத்தில் இதுபோன்று எட்டு மருத்துவமனைகள்தான் உள்ளன. சாதாரண மருந்துக்கடைகளில்கூட கிடைத்து வரும் இவ்வகை உயிர் காக்கும் மருந்து, இச்சட்டத்தால் சாதாரண மனிதனுக்கு கிடைக்காத நிலை ஏற்படும்; கடும் தட்டுப்பாடு ஏற்படும். இந்த சட்டத்துக்கான மசோதா பார்லிமென்ட்டில் விவாதத்துக்கு வரும்போது இதன் தீமைகள் குறித்து எடுத்துரைத்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சங்கப் பொருளாளர் செல்வம், துணை தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.


