/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை வழக்கில் நிறுவனத்துக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் : கோர்ட் அதிரடி உத்தரவுபோலி ஐ.எஸ்.ஐ., முத்திரை வழக்கில் நிறுவனத்துக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் : கோர்ட் அதிரடி உத்தரவு
போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை வழக்கில் நிறுவனத்துக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் : கோர்ட் அதிரடி உத்தரவு
போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை வழக்கில் நிறுவனத்துக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் : கோர்ட் அதிரடி உத்தரவு
போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை வழக்கில் நிறுவனத்துக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் : கோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : அக் 05, 2011 10:11 PM
கோவை : போலி ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்ட பம்ப்செட்கள் வைத்திருந்த வழக்கில், தொழில்
நிறுவன பங்குதாரர்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து
கோவை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து, பி.ஐ.எஸ்., கோவை கிளை தலைவர் வர்கீஸ்ஜாய் அறிக்கை:
மத்திய தர மதிப்பீடு நிறுவனம் (பி.ஐ.எஸ்.) கோவை கிளை சார்பில், கடந்த 2010,
செப்., 2ம் தேதி கணபதி, கே.ஆர்.புரம் ரோடு, பெருமாள் கோவில் தோட்டம்
பகுதியிலுள்ள பாபா ராம்தேவ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ஆய்வு நடந்தது.
லட்சுமி சூப்பர் டீலக்ஸ், லட்சுமி, ஜெயா பம்ப்ஸ், விப்புல், ஓரியண்ட்,
இந்தியா கிங் உள்ளிட்ட பிராண்ட் பெயர்களில் போலி பி.ஐ.எஸ்., தர முத்திரை
கொண்டு வைக்கப்பட்டிருந்த பம்ப்செட்களை பறிமுதல் செய்தனர்.
பி.ஐ.எஸ்., சட்டம் 1986ன் படி, விதிமீறில் குறித்து கோவை கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலி பி.ஐ.எஸ்., முத்திரை கொண்ட பம்ப்செட்களை
வைத்திருந்த குற்றத்துக்காக பாபா ராம்தேவ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன
பங்குதாரர்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட
தவறினால், மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.
மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் வழங்கல்துறை
கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது பி.ஐ.எஸ்., தர மதிப்பீடு நிறுவனம்.
இந்நிறுவனம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்புக்காக ஐ.எஸ்.ஐ., உள்ளிட்ட
பல்வேறு தரமதிப்பீடு முத்திரைகள் வழங்கப்படுகின்றன. போலி ஐ.எஸ்.ஐ., தர
முத்திரை கொண்ட பொருட்கள் விற்பனை நடந்தால், அதுகுறித்த புகார்களை
தெரிவிக்கலாம்.
புகார் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர், பொருள் உற்பத்தியாளர் பெயர்,
முகவரி, விற்பனையாளர் பெயர் உள்ளிட்ட தகவல்களை, ஸ்ரீ வர்கீஸ் ஜாய்,
விஞ்ஞானி'எப்' மற்றும் தலைவர், பி.ஐ.எஸ்., தர மதிப்பீடு நிறுவனம், கோவை
டவர் 5வது மாடி, 44, பாலசுந்தரம் ரோடு, கோவை - 641 018 என்ற முகவரியிலும்,
0422 - 224 8892, 224 9016, 224 0141, 224 5984 என்ற தொலைபேசி எண்களிலும்
தொடர்பு கொள்ளலாம்.
புகார் தெரிவிப்பவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். போலி
ஐ.எஸ்.ஐ., தர முத்திரை கொண்ட பொருட்கள் குறித்த புகார்களை பொதுமக்கள்
தெரிவிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


