வீடு வீடாக சென்று வாக்காளர் சந்திப்பு
வீடு வீடாக சென்று வாக்காளர் சந்திப்பு
வீடு வீடாக சென்று வாக்காளர் சந்திப்பு
ADDED : செப் 20, 2011 10:20 PM
ஆண்டிபட்டி:உள்ளாட்சி தேர்தலில் போட்டிட தயாரானவர்கள், தங்கள் பகுதியில்
வீடு வீடாக சென்று, வாக்காளர்களை சந்தித்து நலம் விசாரித்து ஓட்டு
கேட்கின்றனர்.
ஊராட்சி தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர்கள்,
கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மீண்டும் அந்த இடத்தை தக்க வைக்க
முயற்சிக்கின்றனர். அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வாக்காளர்
குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர். சொந்த பந்தங்களை ஒருங்கிணைத்தல்,
முக்கிய பிரமுகர்கள், சாதி, சங்க தலைவர்களை சந்தித்து தங்களின் செல்வாக்கு
குறித்து ஆலோசித்து வருகின்றனர். கடந்த முறை சில ஓட்டுகள் வித்தியாசத்தில்
தோல்வி அடைந்தவர்கள் அதற்கான காரணங்களை ஆராய்ந்து, இந்த முறை வெற்றி பெற
வேண்டும் என்று முனைப்பு காட்டுகின்றனர்.


