/உள்ளூர் செய்திகள்/சேலம்/தாசில்தார் அலுவலகத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்தாசில்தார் அலுவலகத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்
தாசில்தார் அலுவலகத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்
தாசில்தார் அலுவலகத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்
தாசில்தார் அலுவலகத்தை இடம் மாற்ற வலியுறுத்தல்
ADDED : ஜூலை 11, 2011 03:04 AM
சேலம்: சேலம் மாநகரப் பகுதியில் உள்ளது தாசில்தார் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சுசீந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் தாசில்தார் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கியின் பின்னால், ஒரு பாழடைந்த பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. வசதி இல்லாத கட்டிடத்தில், ஒரு மாவட்டத்தின் தலைநகரை சேர்ந்த தாசில்தார் அலுவலகம் இயங்குவது பெரும் வேதனையாக உள்ளது. யார் எந்த பிரிவில் பணியாற்றுகிறார்கள் என்பது தெரியவில்லை. பொதுமக்களை அலைக்கழிக்கும் போக்குதான் அதிகம் உள்ளது.
கல்வி ஆவணங்களுக்காக சான்றிதழ் பெற வரும் மாணவ மாணவியர், உதவித்தொகை பெற வரும் முதியோர், விதவையர், மாற்றுத்திறனாளிகள், இடம் தெரியாமல் அல்லல்படுகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலோ அல்லது நாட்டாண்மை கழக கட்டிடத்திலோ, தாசில்தார் அலுவலகத்தை இயங்க செய்வதற்கான நடவடிக்கையை கலெக்டர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.