/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குளத்தில் போலீஸ் துறைக்கு கட்டடங்கள் கட்ட முயற்சிநெல்லையில் செப். 5ல் உண்ணாவிரதப்போராட்டம்குளத்தில் போலீஸ் துறைக்கு கட்டடங்கள் கட்ட முயற்சிநெல்லையில் செப். 5ல் உண்ணாவிரதப்போராட்டம்
குளத்தில் போலீஸ் துறைக்கு கட்டடங்கள் கட்ட முயற்சிநெல்லையில் செப். 5ல் உண்ணாவிரதப்போராட்டம்
குளத்தில் போலீஸ் துறைக்கு கட்டடங்கள் கட்ட முயற்சிநெல்லையில் செப். 5ல் உண்ணாவிரதப்போராட்டம்
குளத்தில் போலீஸ் துறைக்கு கட்டடங்கள் கட்ட முயற்சிநெல்லையில் செப். 5ல் உண்ணாவிரதப்போராட்டம்
ADDED : ஆக 22, 2011 02:37 AM
திருநெல்வேலி:நெல்லையில் குளத்தில் போலீஸ் துறைக்கு குடியிருப்புகள்,
கட்டடங்கள் கட்டும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி செப்டம்பர் 5ல்
உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது.பாளை. என்.ஜி.ஓ., நியூகாலனியில் பெரியகுளம்
உள்ளது. இக்குளம் 10 கி.மீ., சுற்றளவுப்பகுதிக்கு நிலத்தடி நீர்மட்டத்தை
உயர்த்தும் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், பெரியகுளத்தில் மாநகர
போலீசாருக்கு குடியிருப்புகள், அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கு அதிகாரிகள்
நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.குளத்தை நிரப்பி கட்டடங்களை கட்டினால்
என்.ஜி.ஓ., காலனியை சுற்றியுள்ள 27 காலனிகளில் வசிக்கும் 30 ஆயிரம் மக்கள்
நிலத்தடிநீர் இன்றி வீட்டை காலிசெய்ய வேண்டிய நிலை ஏற்படும், நீர்ஆதாரம்
பாதிக்கப்படும் வகையில் குளத்தில் குடியிருப்புகள் கட்டக்கூடாது என மக்கள்
கூறிவருகின்றனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள 27 நலச்சங்கங்களை கொண்ட என்.ஜி.ஓ., காலனி
பெரியகுளம் பாதுகாப்பு கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டமைப்பின்
பொதுக்குழுக்கூட்டம் நேற்று நடந்தது.தலைவர் சண்முகசுந்தரம் தலைமை
வகித்தார். செயலாளர் சீத்தாராமன் வரவேற்றார். துணைத்தலைவர் சிதம்பரம்,
அமைப்புச்செயலாளர் முத்துசாமி, பொருளாளர் சுப்பிரமணியன் உட்பட பலர்
பேசினர். என்.ஜி.ஓ., ஏ காலனி, பி காலனி, நியூ காலனி, தமிழ்நகர், ஸ்டேட்
பாங்க் காலனி, உதயா நகர், டிரைவர் மற்றும் ஓ.ஏ., காலனி, மகிழ்ச்சி நகர்,
கனரா பாங்க் அலுவலர் நகர், திருமால் நகர், பாரதி நகர், திருநகர், மர்பி
நகர், பொதிகை நகர், சேவியர் காலனி, அழகர் நகர், விநாயகர் காலனி, சக்திநகர்,
ரோஜா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நலச்சங்க நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்.
குளத்தில் போலீஸ் துறைக்கு அலுவலகங்கள், குடியிருப்புகள் கட்டும்
நடவடிக்கையை கைவிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி முதற்கட்டமாக செப்டம்பர்
5ம்தேதி 27 காலனி மக்களை திரட்டி என்.ஜி.ஓ., காலனி வட்டாரப்போக்குவரத்து
அலுவலகம் முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நீர் ஆதாரத்தை அதிகரிக்க தமிழகத்தில் மீண்டும் மழைநீர்
சேகரிப்புத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு
பாராட்டு தெரிவிக்கப்பட்டது.