/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கைடாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரிக்கை
ADDED : ஜூலை 11, 2011 11:31 PM
ஸ்ரீபெரும்புதூர் : டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யக் கோரி, மொளச்சூர் கிராம மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுங்குவார்சத்திரம் அடுத்துள்ளது, மொளச்சூர் கிராமம். இக்கிராமத்தில், 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சாலையில், குடியிருப்புகளுக்கு இடையே, 4 ஆண்டுகளுக்கு முன், டாஸ்மாக் கடையை திறந்தனர். 'குடி' மகன்கள் குடித்துவிட்டு, சாலையில் செல்லும் பெண்களை கிண்டல் செய்தும், மிரட்டுவதும், அநாகரீகமான வார்த்தைகளால் பேசியும் வந்தனர். இதனால், இப்பகுதியில் வசிக்கும் பெண்கள், அவதிப்பட்டு வந்தனர்.
இக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி, வியாபாரிகள் சங்கம் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம், மொளச்சூர் ஊராட்சி எல்லைக்கு வெளியே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யாவிட்டால், ஆர்பாட்டம் செய்ய உள்ளதாக துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.