ADDED : செப் 06, 2011 10:42 PM
திண்டிவனம் : திண்டிவனம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கூட்டம் நடந்தது.
திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., செம்பு குட்டி தலைமை தாங்கினார். திண்டிவனம் தாசில்தார் தலை மலை,தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மனோகரன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஓட்டுச் சாவடி நிலை அலுவலர் கள் 210 பேரும், ஓட்டுச் சாவடி நியமன அலுவர்கள் 210 பேரும் கலந்து கொண்டனர். வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் பணியை எப்படி செய்வது என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.


