ADDED : செப் 19, 2011 12:51 AM
அரியலூர்: கீழப்பழுவூர் அருகே டூவீலர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்
கருப்பையன்(65).
தனது சொந்த வேலை காரணமாக கல்லூர் கிராமத்துக்கு வந்த
முதியவர் கருப்பையன், சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவ்வழியே டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸல் மொபெட்டில் வந்த, கல்லூர் கிராமத்தை
சேர்ந்த அருள் அரசன், தாறுமாறாக பைக் ஓட்டியதால், முதியவர் கருப்பையன் மீது
மொபெட் மோதியது. கடந்த 16ம் தேதி நடந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர்
கருப்பையன், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,
சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். மொபட் ஓட்டிய அருள் அரசனும்
பலத்த காயங்களுடன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார். விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


