/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டியில் நகராட்சி நிர்வாகஇணை இயக்குனர் ஆய்வுபண்ருட்டியில் நகராட்சி நிர்வாகஇணை இயக்குனர் ஆய்வு
பண்ருட்டியில் நகராட்சி நிர்வாகஇணை இயக்குனர் ஆய்வு
பண்ருட்டியில் நகராட்சி நிர்வாகஇணை இயக்குனர் ஆய்வு
பண்ருட்டியில் நகராட்சி நிர்வாகஇணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 11, 2011 02:05 AM
பண்ருட்டி:பண்ருட்டி நகராட்சி பகுதியில் வடிகால் வசதிகளை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழை துவங்குவதை முன்னிட்டு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அதிகாரிகள்
மாவட்டம் தோறும் ஆய்வு செய்து வருகின்றனர்.அதன்படி கடலூர் மாவட்டத்தில்
நகராட்சி பகுதியில் தமிழக நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் (நிர்வாகம்)
சந்திரசேகர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி
நகராட்சி பகுதிகளில் வடிகால்கள், சாக்கடைகள் சீரமைப்பது குறித்து ஆய்வு
செய்தார். பண்ருட்டி நகராட்சி பகுதியில் காமராஜர் நகர், வாலாஜா வாய்க்கால்,
இந்திரா காந்தி சாலை, உள்ளிட்ட பகுதியில் மழைக்காலத்தில் மழை நீர் வடிந்து
செல்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.ஆய்விற்கு பின்னர் நகரில் பிளாஸ்டிக்
பைகள் உபயோகம் அதிகரிப்பால் சாக்கடையில் கழிவுகள் சேர்ந்து கழிவுநீர் செல்ல
முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனை தவிர்க்க பிளாஸ்டிக் உபயோகம் குறித்த
விழிப்புணர்வு கூட்டம், பிரசாரம் நடத்தி குறைக்க வேண்டும் என நகராட்சி
கமிஷனர் அருணாசலத்திடம் கேட்டுக் கொண்டார்.ஆய்வின்போது நகராட்சி பொறியாளர்
சுமதிசெல்வி, சுகாதார அலுவலர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.