Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் ஒரு கோடி ரூபாயில் நலப்பணிகள்

அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் ஒரு கோடி ரூபாயில் நலப்பணிகள்

அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் ஒரு கோடி ரூபாயில் நலப்பணிகள்

அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் ஒரு கோடி ரூபாயில் நலப்பணிகள்

ADDED : அக் 07, 2011 12:55 AM


Google News

மாமல்லபுரம் : சென்னை அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்டப் பணிகள் துவக்கப்படுவதாக, அணுமின் நிலைய இயக்குனர் ராமமூர்த்தி கூறினார்.



இதுகுறித்து, அவர் கூறியதாவது: கல்பாக்கத்தில், சென்னை அணுமின் நிலையத்தை இயக்கி வரும் இந்திய அணுமின் கழகம், அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள கிராமங்களில், பல்வேறு நலத் திட்டப்பணிகள் செய்து வருகிறது.

இக்கிராமங்களில், பள்ளி, சமுதாயக்கூடம், அங்கன்வாடி ஆகியவற்றுக்கு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தற்போது, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்டப் பணிகள் செய்ய முடிவெடுத்து டெண்டர் விடப்பட்டுள்ளது. சதுரங்கப்பட்டினம், மெய்யூர் ஆகிய இடங்களில், சமுதாயக்கூடம், மணமை மற்றும் குன்னத்தூர் கிராமங்களில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வடகடம்பாடியில் பள்ளிக் கட்டடம், ஆரம்பாக்கத்தில் குழந்தைகள் காப்பகம், 18 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கலன் ஆகியவை அமைக்கப்படுகிறது.



சென்னை அணுமின் நிலையம், இரு யூனிட் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நாள்தோறும், 75 லட்சம் யூனிட் மின்சாரம், மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது. நிலக்கரி, நீர், காற்று ஆகியவை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விட, அணுசக்தி மின்சாரத்தின் விலை மிகவும் குறைவானது. இதில், சுற்றுப்புற மாசு ஏற்படாது. இயற்கையாக உள்ள கதிரியக்க அளவை விட (240 மில்லி ரெம்), குறைவாகவே கல்பாக்கத்தில் உள்ளது. அணுமின் நிலையத்தால் சுற்றுப் புறத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அணுமின் நிலையம் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் உள்ளது. நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அணுசக்தி, ஆக்கப்பூர்வமான சக்தி என்பதை மக்கள் உணரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us