/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சொத்துக்காக அண்ணன் அடித்து கொலை : தலைமறைவான "பாசக்கார' தம்பிக்கு வலைசொத்துக்காக அண்ணன் அடித்து கொலை : தலைமறைவான "பாசக்கார' தம்பிக்கு வலை
சொத்துக்காக அண்ணன் அடித்து கொலை : தலைமறைவான "பாசக்கார' தம்பிக்கு வலை
சொத்துக்காக அண்ணன் அடித்து கொலை : தலைமறைவான "பாசக்கார' தம்பிக்கு வலை
சொத்துக்காக அண்ணன் அடித்து கொலை : தலைமறைவான "பாசக்கார' தம்பிக்கு வலை
ADDED : ஜூலை 11, 2011 11:54 PM
முதுநகர் : சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செ#துவிட்டு, தலைமறைவான தம்பியை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலூர் வழிசோதனைப்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன்கள் சண்முகவேல், 27, சண்முகசுந்தரம், 24. விவசாயிகளான இவர்கள், மூன்று ஆண்டிற்கு முன் தங்களது தந்தை சின்னதுரை இறந்ததால் பூர்வீக சொத்தான 12 ஏக்கர் நிலத்தை இருவரும் சமமாக பாகம் பிரித்துக் கொண்டனர். வீட்டை பாகம் பிரிப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. பிரச்னைக்குரிய வீட்டில் சண்முகவேல் தனது மனைவி சுபத்திரா, 23, மகள் ரீட்டா,3, ஆகியோருடன் வசித்து வந்தார்.
பூர்வீக வீட்டை பாகம் பிரிக்காமல் சண்முகவேலு எடுத்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம் தினமும் குடித்து விட்டு வந்து தனது அண்ணன் சண்முகவேலுவை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறி தகராறு செ#து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வந்த சண்முகசுந்தரம், மரத்தடியால் சண்முகவேலுவின் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த சண்முகவேல் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார். முதுநகர் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப் பதிந்து, சொத்துக்காக அண்ணனை அடித்து கொலை செ#துவிட்டு தலைமறைவான தம்பி சண்முகசுந்தரத்தை தேடிவருகின்றனர்.