Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பாலூரில் ரூ.17 கோடி மதிப்பில் ரயில்நீர் தொழிற்கூடம் துவக்கம்

பாலூரில் ரூ.17 கோடி மதிப்பில் ரயில்நீர் தொழிற்கூடம் துவக்கம்

பாலூரில் ரூ.17 கோடி மதிப்பில் ரயில்நீர் தொழிற்கூடம் துவக்கம்

பாலூரில் ரூ.17 கோடி மதிப்பில் ரயில்நீர் தொழிற்கூடம் துவக்கம்

ADDED : ஜூலை 11, 2011 11:32 PM


Google News

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே, 17 கோடி ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்டுள்ள ரயில்நீர் தொழிற்கூடத்தை, காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன் நேற்று துவக்கி வைத்தார்.

இந்திய ரயில்வே உணவுமற்றும் சுற்றுலா கழகம், ரயில் பயணிகளுக்கான உணவகம், சுற்றுலா ஆகிய சேவைகளுடன் பயணிகளுக்கு, சுத்திகரிப்பு குடிநீர் வழங்க, ரயில்நீர் தொழிற்கூடங்களையும் அமைத்துநடத்துகிறது. தமிழகத்தில், செங்கல்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தில், 13.50 கோடி ரூபாய் மதிப்பில், தொழிற்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 2008ம் ஆண்டு நவ., 23ம்தேதி, அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் வேலு அடிக்கல்நாட்டினார்.



கட்டுமானம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தும் பணி, இரண்டரை ஆண்டுகளாக நடந்தது. தற்போது, 3.5 ஏக்கர் பரப்பளவு வளாகத்தில், 3,500 ச.மீ., பரப்பளவு தொழிற்கூடம், 17 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை, நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்டது. பாலாற்று நீரை நவீன முறையில் சுத்திகரித்து, ஒரு லிட்டர் கொள்ளளவு பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பி, பயணிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



தெற்கு ரயில்வே நிர்வாக எல்லைக்குட்பட்ட தமிழகம், கேரளம், தெற்கு ஆந்திரம், கிழக்கு கர்நாடகம் ஆகிய இடங்களில் இயங்குகின்ற தொலைதூர ரயில்கள், ரயில் நிலைய கடைகள் ஆகியவற்றில், இந்த குடிநீர் விநியோகிக்கப்படும். புதிய தொழிற்கூட இயக்க சோதனை, கடந்த மாதம் துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது. தொழிற்கூட துவக்க விழாகாஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன் தலைமையில் நேற்று நடந்தது.



அவர் துவக்கிவைத்து பேசியதாவது: பாலூரில் தடுப்பணை கட்ட, மத்திய நீர்வள ஆதாரத்துறையிடம் ஆலோசித்தபோது, மாநில அரசு அறிக்கை அளித்தால் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.இங்கு, 19 கோடி ரூபாய்

மதிப்பிலும், நல்லாத்தூரில் 29 கோடி ரூபாய் மதிப்பிலும், ஆலப்பாக்கத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பிலும் தடுப்பணை கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பொன்விளைந்தகளத்தூரில், 8 கோடி ரூபாய் மதிப்பில் அரசே அணைக் கட்ட முடிவெடுத்திருப்பதை வரவேற்கிறேன். செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலை ரயில்வே மேம்பாலப்பணியை விரைவாக முடிக்க வேண்டும். பாலூர் தொழிற்கூடத்தில் இதே தொகுதியை சேர்ந்த பணியாளர்களை நியமிக்க வேண்டும், என்றார். நிறுவன பொது மேலாளர் ராகேஷ் தாண்டன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., முருகேசன், பாலூர் ஊராட்சி தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us