/உள்ளூர் செய்திகள்/சேலம்/நிறுவனத்தை அறிந்து முதலீடு செய்யணும் அதிகாரி பேச்சுநிறுவனத்தை அறிந்து முதலீடு செய்யணும் அதிகாரி பேச்சு
நிறுவனத்தை அறிந்து முதலீடு செய்யணும் அதிகாரி பேச்சு
நிறுவனத்தை அறிந்து முதலீடு செய்யணும் அதிகாரி பேச்சு
நிறுவனத்தை அறிந்து முதலீடு செய்யணும் அதிகாரி பேச்சு
ADDED : ஆக 01, 2011 04:15 AM
ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள வடசென்னிமலை அறிஞர் அண்ணா
அரசுக்கலைக்கல்லூரியில், வணிகவியல் பாடப்பிரிவு மாணவ, மாணவியருக்கு, 'இளம்
முதலீட்டாளர்களின் நிதி திட்டமிடுதல்' குறித்த விழிப்புணர்வு மற்றும்
நிதிக்கல்வி பயிலரங்க கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், மத்திய அரசின்
'செக்யூரிட்டி அன்ட் எக்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா' நிறுவன தென்மண்டல
அதிகாரி முத்து கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:உலக அளவில் பங்கு வர்த்தகத்தில்
முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில், பொருள்
மீதும், கம்பெனியின் பெயரில் முதலீடு செய்யப்படுகிறது. அவ்வாறு முதலீடு
செய்யும் நபர்கள், போலியான முகவரி கொண்ட நிறுவனத்தில் முதலீடுகள்
செய்யும்போது ஏமாற்றப்படுகின்றனர்.பங்கு வர்த்தகத்தில் நடக்கும்
முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மத்திய அரசின் 'செக்யூரிட்டி அன்ட்
எக்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதில்,
சென்னை, அஹமதாபாத், மும்பை, கோல்கத்தா ஆகிய மாநிலங்களில் இந்நிறுவனம்
உள்ளது.
முதலீடு செய்யும் நிறுவனம் குறித்து நன்கு அறிந்து கொண்ட பின்பு
முதலீட்டாளர்கள், பொருள் மற்றும் நிறுவனத்தின் மீது வர்த்தகம் செய்யலாம்.
தமிழகத்தில், நிலம், தங்கத்தின் மீது அதிகளவில் மூலதனம் செய்யப்படுகிறது.
தங்கத்தின் மீது மோகம் அதிகளவில் உள்ளதால், அதன் விலையும் குறையாமல்
இருக்கிறது. வருவாய் உயர்ந்துள்ளதால், வாங்கும் சக்தி அதிகரிப்பு மற்றும்
சேமிப்புகளும் அதிகம் உள்ளன.இவ்வாறு பேசினார்.கல்லூரி முதல்வர்
திருமூர்த்தி, வணிகவியல் துறை தலைவர் செல்லதுரை, வணிக நிர்வாகவியல் துறை
தலைவர் டாக்டர்.கண்ணன், பேராசிரியர்கள் கதிர்வேல், மாணவ, மாணவியர் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.