Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/போலி டாக்டர்களைப் பிடிக்க போலீசார்...வேட்டை : ஒரே நாளில் எட்டு பேர் கைது

போலி டாக்டர்களைப் பிடிக்க போலீசார்...வேட்டை : ஒரே நாளில் எட்டு பேர் கைது

போலி டாக்டர்களைப் பிடிக்க போலீசார்...வேட்டை : ஒரே நாளில் எட்டு பேர் கைது

போலி டாக்டர்களைப் பிடிக்க போலீசார்...வேட்டை : ஒரே நாளில் எட்டு பேர் கைது

ADDED : செப் 22, 2011 12:33 AM


Google News

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ஒரே நாளில், எட்டு போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர் வேட்டையால் மற்ற போலி டாக்டர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆங்கில மருந்துகளை கையாண்டும், ஊசி போட்டும், கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு, போலி சிகிச்சை அளித்து பலர் ஏமாற்றி வருகின்றனர் என திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., வனிதாவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட போலீசார் தங்களது எல்லையில் உள்ள கிளினிக்குகளில் சோதனையில் ஈடுபட்டனர். எட்டு பேர் கைது: அரண்வாயல்குப்பம் கிராமத்தில் பெண் போலி டாக்டர் விமலா, 31; கடம்பத்தூர் பஜார் வீதியில் கிளினிக் நடத்தி வந்த மேரிபத்மாவதி, 45; மணவூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி, 38; பேரம்பாக்கம் ஊராட்சியில் திருவள்ளூர் சாலையில் கிளினிக் நடத்தி வந்த சுந்தரராஜன், 34; தேவம்பட்டு கிராமத்தில் கிளினிக் நடத்திய சந்திரன், 55; திருத்தணி நகரில் கிளினிக் நடத்தி வந்த வேளாங்கண்ணி, 35; கே.ஜி.கண்டிகை கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்த நாகூர், 47 மற்றும் நாகராஜ், 50; ஆகிய எட்டு போலி டாக்டர்களை ஒரே நாளில் கைது செய்துள்ளனர்.



தகவலறிந்து கிராமங்களில் கிளினிக் வைத்து நடத்தி வந்த, மற்ற போலி டாக்டர்கள் பலர் தங்களது கிளினிக்குகளை மூடிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். வேட்டை தொடரும்: இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., வனிதா கூறும் போது, ''தகுந்த மருத்துவ படிப்பு இன்றி, கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருபவர்கள், யாராக இருந்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த போலி டாக்டர்கள் வேட்டை, மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்,'' என்றார். கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும், 30 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அதற்கான அபராதத்தை செலுத்திவிட்டு, மீண்டும் கிராமங்களை குறிவைத்து கிளினிக்குகளை திறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.­









      Our Apps Available On




      Dinamalar

      Follow us