ADDED : ஆக 22, 2011 05:06 AM
டோலுகா(மெக்சிக்கோ) : மெக்சிக்கோநாட்டில் நகர மேயரை மர்ம நபர்கள் கடத்திச்சென்று சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.மெக்சிக்கோ நகர மேயராக பதவியில் இருந்து வருபவர் நாவா அல்டாமிரானோ.போதைமருந்து கும்பலால் சிக்கிதவிக்கும் மெக்சிக்கோவை நல்வழிப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வந்தார்.
இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை ஜாக்குவால் பான் என்னும் இடத்தில் விவசாயிகளை சந்தித்து பேச சென்றார் . அப்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்ட அவர் குரேரோ என்னுமிடத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது பாதுகாவலர்களே அவரை சுட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.மேலும் அவரது இறப்பிற்கு எந்த வித தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை. இவருக்கு முன்னர் பதவி வகித்த மேயர்கள் அனைவரும் போதை மருந்து கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.