/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/பிரம்மபுரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிப்புபிரம்மபுரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
பிரம்மபுரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
பிரம்மபுரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
பிரம்மபுரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
தக்கலை : குமரி பாலன் நினைவு தினத்தை முன்னிட்டு பிரம்மபுரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த தேசத்தை இரண்டாக பிளவுபடுத்திய காயிதேமில்லத்தின் பெயரை சூட்ட கூடாது என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி போராடி கொண்டிருந்தது. அப்போது குமரிபாலனை திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளராக்கி அங்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு சென்றதால் கோபால்ஜியின் உதவியாளராக நான் பணியாற்றினேன். அப்போது திண்டுக்கல்லில் இந்து எழுச்சி மாநாடு நடத்த கோபால்ஜி முடிவு செய்து அறிவித்தார். அரசு மாநாடு நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது.மாநாடு நடத்த தடை போட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி மாநாடு, ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் யாரும் நுழைந்துவிட கூடாது என்று அனைத்து எல்லைகளையும் காவல்துறை சீல் வைத்தது. இந்துக்களின் வீடு, வீடாக சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் போராட்டம் நடத்தியே தீரவேண்டும். இந்து தோற்றுவிட்டான் என்று கூற கூடாது என்பதற்காக கூட்டமாக செல்லாமல் தனியாக சென்று குறித்த நாளில், குறித்த நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக கோபால்ஜி இரண்டு பேரை அழைத்தார். பொதுச்செயலாளராக இருந்த சிதம்பரம், இன்னொன்று நான். இரண்டு பேரின் பொறுப்பு சிதம்பரம் ஊர்வலம் துவங்கும் இடத்தில் நின்று கொண்டு கோஷமிட வேண்டும். முடியும் இடத்தில் நான் நின்று கோஷமிட வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி மூன்று மாவட்ட எஸ்.பி., க்கள், டி.ஐ.ஜி., ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஆகியோரின் பாதுகாப்பையும் மீறி சிதம்பரமும், நானும் மாறுவேடத்தில் சென்றோம்.ஊர்வலம் துவங்கும் இடத்தில் சரியான நேரத்தில் சென்ற சிதம்பரம் மாறுவேடத்தில் நின்று கொண்டு கோஷமிட்டார். அதுபோல் நானும் ஊர்வலம் முடியும் இடத்தில் மாறுவேடத்தில் நின்று கோஷமிட்டேன். இப்படி திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தி முடித்தோம். அதேபோன்று தான் கடற்முற்றுகை போராட்டத்தையும் மாறுவேடத்தில் சென்று போலீஸ் தடையையும் மீறி குறிப்பிட்ட நேரத்தில் நடத்தினோம். அதை தான் நான் கடலில் நின்றபோது குமரிபாலன் குறித்த நினைவு வர காரணம்.குமரிபாலன் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தாலும், இந்து தர்மத்திற்காக தியாகம் செய்தவர். சாப்பாடு கிடைக்காமல் குஸ்காவை சாப்பிட்டு பணியாற்றினார். சிரித்த முகத்தோடு எப்போதும் இந்து சமுதாயத்தை பற்றியே சிந்திப்பார். ஓவியம், எழுத்து, பேச்சு என பல துறையில் சிறந்து விளங்கினார். ஐந்து நிமிடம் அவரிடம் பேசினால் போதும். இயக்கத்தில் அவர்கள் ஐக்கியமாகி விடுவார்கள்.அப்படிப்படவரை முஸ்லிம் தீவிரவாதிகள் கொன்றுவிட்டார்கள். மனிதன் பிறப்பதும், இறப்பதும் இயற்கை. ஆனால் இதுபோன்ற மரணம் வாழ்க்கையில் ஏற்படுவது பிறப்பால் வந்த பாக்கியம். சோகத்திற்காக வாழ்ந்து வந்தவர் அதற்காக கொல்லப்படுகிறார் என்றால் இதைவிட பாக்கியம் ஏதுவாக இருக்கும். தாணுலிங்கநாடார் சொல்லுவார், நான் பேசிக்கொண்டிருக்கும் போதே உயிர் போயிட வேண்டும் என்று. இந்து சமுதாயத்திற்காக அவர் செய்த பணிகளை போன்றுதான் குமரிபாலனும் செய்தார். அவர் வழியில் நாமும் வாழ வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
இந்து முன்னணி மாநில தலைவர் அரசு ராஜா பேசியதாவது:குமரிபாலன் தேசபக்தர் என்று சொல்வதைவிட துறவி என்று சொல்லலாம். சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் இன்முகமாக பழக கூடியவர். சீரியசான பிரச்னையையும் ஈசியாக எடுத்து கொள்வார். அவர் பிறந்த இந்த மண் புனிதமானது. வீடு தெய்வீகமானது.பாலன் உயிரிழந்த போது அரசு கொடுத்த ஒரு லட்சம் ரூபாயை அவரது அம்மா பெற்றுக்கொள்ளவில்லை. மாறாக என் மகனை தேசத்திற்காக உழைக்க செய்த இந்து முன்னணிக்கு கொடுத்து விடுகிறேன். அந்த பணம் இந்து முன்னணியிடம் இருக்கட்டும் என்று கூறினார்கள். அப்படிப்பட்ட தியாக குடும்பம். குமரிபாலன் விட்டு சென்ற பணியை நாம் செய்ய வேண்டும் என அரசுராஜா பேசினார்.முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பாலசந்தர், வேலாயுதம், பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ் பேசினர். நிகழ்ச்சியில் பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், துணைத்தலைவர் விஜயலெட்சுமி, செயலாளர்கள் கிருஷ்ணகுமார், தேவ், டாக்டர் சுகுமாரன், குமரி கோட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், துணைத்தலைவர் நாரயணகுமார், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கோபகுமார், ரத்தினமணி, தேசிய மகளிரணி செயலாளர் விக்டோரியாகவுரி, மாநில வர்த்தக அணி செயலாளர் ஜெயச்சந்திரன், மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் தங்கப்பன், பா.ஜ., நகர தலைவர்கள் உண்ணிகிருஷ்ணன், ராஜன், சேவாபாரதி மாநில அமைப்பாளர் பரமேஸ்வரன், மாவட்ட அமைப்பாளர் ராமசந்திரன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் மிசாசோமன், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் ஜோதீந்திரன், மனோகரன், ராஜேந்திரன், வி.ஹெச்.பி., மாவட்ட தலைவர் காளியப்பன், பாரதி பவுண்டேசன் தலைவர் முருகேசன் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கோடியூர் சுப்பையா நன்றி கூறினார். முன்னதாக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து இந்து முன்னணி மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்கள், தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். இதுபோல் திருவிடைக்கோட்டில் இருந்து கிருஷ்ணசேனா அமைப்பு சார்பில் தொடர் ஜோதி ஓட்டமாக ஜோதி கொண்டு வரப்பட்டது. ஜோதியை பா.ஜ., மாநில தலைவர் பெற்று கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை குமரிபாலனின் சகோதரர்களான பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் குமரிரமேஷ், முன்னாள் ராணுவ வீரர் தங்கப்பன் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.


