/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வரத்து அதிகரிப்பால்காலிஃபிளவர் விலை சரிவுவரத்து அதிகரிப்பால்காலிஃபிளவர் விலை சரிவு
வரத்து அதிகரிப்பால்காலிஃபிளவர் விலை சரிவு
வரத்து அதிகரிப்பால்காலிஃபிளவர் விலை சரிவு
வரத்து அதிகரிப்பால்காலிஃபிளவர் விலை சரிவு
ADDED : செப் 12, 2011 04:03 AM
ஈரோடு:நல்ல மழையால் காலிஃபிளவர் விளைச்சல் அமோகமாகி ஒரு பூ 10 ரூபாய்க்கு
விற்பனையாகிறது.தமிழகத்தில் வெப்பநிலை குறைவாக மலை பகுதிகளில் காலிஃபிளவர்
விளைவிக்கப்படுகிறது. ஊட்டி, மேட்டுபாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை, ஓசூர், பெங்களூரு, ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர்
ஆகிய பகுதியில் அதிகளவு காலிஃபிளவர் சாகுபடி செய்யப்படுகிறது.முதலில்
சீஸனுக்கு ஏற்ப வரத்து அதிகமாகியது. தற்போது ஆண்டு முழுவதும் காலிஃபிளவர்
சீஸன் உள்ளதால், ஈரோடுக்கு நேதாஜி பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட்
பகுதிகளிலும், நகர பகுதிக்கும் விவசாயிகள் காலிஃபிளவரை டெம்போவில் கொண்டு
வந்து விற்கின்றனர்.ஹோட்டல்களில் செய்யும் காளிஃபிளவர் சில்லி, கிரேவியில்,
அசைவ உணவுகளை போல அதிக சுவை உள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் விரும்பி
வாங்குகின்றனர்.
பொதுமக்கள் வீட்டுக்கு அதிகளவு வாங்கி
செல்கின்றனர்.விளைச்சல், வரத்து மற்றும் விற்பனை அதிகரிப்பால் காலிஃபிளவர்
20 முதல் 25 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 10 ரூபாய் குறைந்தும், பெரிய பூ
10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது.காலிஃபிளவர் வியாபாரி கிட்டு
கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலங்களில் காலிஃபிளவர் சீஸன் துவங்கும்.
பெரும்பாலும் வெப்பநிலை குறைந்த பகுதியில் ஆண்டு முழுவதும் விளைச்சலாகும்.
நடப்பு ஆண்டு மலை பகுதிகளில் நல்ல மழை காரணமாக விளைச்சல் இருமடங்கு
அதிகரித்துள்ளது.பெங்களூரு, ஊட்டி, மேட்டுபாளையம், ஓசூர், தேன்கனிக்கோட்டை,
அந்தியூர், பர்கூர் ஆகிய பகுதியில் இருந்து தினமும் 15 லோடு வரை லாரியில்
ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்தாகிறது. இங்கிருந்து நகரங்களில் முக்கிய
பகுதிகளில் மினிடோர் மூலம் சப்ளையாகிறது.
சென்ற மாதம் 25 ரூபாய் வரை விற்றோம். தற்போது மூன்றரை கிலோ எடை கொண்ட
காளிஃபிளவர் பூ ஒன்று 15 ரூபாய்க்கும், இதர பூக்கள் 10 ரூபாய்க்கும்,
மிகச்சிறிய பூ 15 ரூபாய்க்கு இரண்டு விற்கப்படுகிறது.இவ்வாறு அவர்
கூறினார்.