/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் : திட்டக்குடியில் அழகிரி எம்.பி., பேச்சுமத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் : திட்டக்குடியில் அழகிரி எம்.பி., பேச்சு
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் : திட்டக்குடியில் அழகிரி எம்.பி., பேச்சு
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் : திட்டக்குடியில் அழகிரி எம்.பி., பேச்சு
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் : திட்டக்குடியில் அழகிரி எம்.பி., பேச்சு
ADDED : ஆக 29, 2011 10:09 PM
திட்டக்குடி : ''மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும்'' என கடலூர் எம்.பி., அழகிரி பேசினார்.
திட்டக்குடியில் காங்., கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பிறந்தநாள் விழா மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலர் இளவழகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சரவணன், முன்னாள் மாவட்டத் தலைவர் கண்ணன், நல்லூர் வட்டார தலைவர் கந்தசாமி, மாவட்டச் செயலர் செல்வமணி கந்தசாமி, சோனியா பேரவைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கனகசபை வரவேற்றார். கூட்டத்தில் அழகிரி எம்.பி., பேசியதாவது: மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்தால் மட்டுமே தமிழகம் தன்னிறைவு அடையும். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பொருளாதார சீரழிவில் சிக்கித் தவிக்கும் போது இந்திய பொருளாதாரம் பாதிப்பின்றி இருப்பதற்குக் காரணம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் வழிகாட்டுதல்தான். அன்னா ஹசாரே காந்திய வழியில் போராடுவதை ஆதரிக்கும் நாங்கள் இந்திய ஜனநாயகத்தை குளறுபடி செய்யும் வேலைகளுக்கு இடமளிக்க மாட்டோம். இந்திய சட்டத்தின்படி எதிர்க்கட்சி தலைவர் தலைமையாகக் கொண்ட பொதுக் கணக்குக் குழுவும், நாடாளுமன்ற குழுவும் பிரதமரை விசாரிக்க வழி உள்ளது. இவ்வாறு அழகிரி எம்.பி., பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை, இளைஞர் காங்., நகர தலைவர் ராஜ்குமார், பாலமுருகன், சேவாதளம் முருகன், குமார் மாணவரணி ராம்பிரபு உட்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சவுந்திர ராஜன் நன்றி கூறினார்.