/உள்ளூர் செய்திகள்/சேலம்/சகோதரர்களை தாக்கிய 7 பேர் மீது போலீஸ் வழக்குசகோதரர்களை தாக்கிய 7 பேர் மீது போலீஸ் வழக்கு
சகோதரர்களை தாக்கிய 7 பேர் மீது போலீஸ் வழக்கு
சகோதரர்களை தாக்கிய 7 பேர் மீது போலீஸ் வழக்கு
சகோதரர்களை தாக்கிய 7 பேர் மீது போலீஸ் வழக்கு
ADDED : ஆக 16, 2011 04:09 AM
தம்மம்பட்டி : தம்மம்பட்டி அருகே ஏற்பட்ட தகராறில் இருவரை தாக்கிய, ஏழு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஒருவரை கைது செய்தனர்.
தலைமறைவான ஆறு பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டி, பஜனைமடத் தெருவை சேர்ந்தவர் விவசாயி செந்தில்குமார். இவர், அவரது சகோதரருடன் கடந்த சில தினத்துக்கு முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த நாராயணசாமி, துரைராஜு உள்ளிட்ட சிலர், செந்தில்குமார், அவரது சகோதரர் இருவரிடமும் தகராறு செய்து, தகாத வார்த்தையால் அர்ச்சனை செய்து, இரும்பு கம்பி, கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.காயமடைந்த இருவரும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தம்மம்பட்டி போலீஸார், பூமாலை, நாராயணன், துரைராஜு, ஆலமுத்து, பச்சமுத்து, அசோக்குமார் மற்றும் சிவக்குமார் ஆகிய ஏழு பேர் மீது, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.அதில், துரைராஜு என்பவரை போலீஸார் கைது செய்து, தலைமறைவான மற்ற ஆறு பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.


