Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் சுதந்திர தின கோலாகல கொண்டாட்டம்

நீலகிரியில் சுதந்திர தின கோலாகல கொண்டாட்டம்

நீலகிரியில் சுதந்திர தின கோலாகல கொண்டாட்டம்

நீலகிரியில் சுதந்திர தின கோலாகல கொண்டாட்டம்

ADDED : ஆக 17, 2011 02:19 AM


Google News
.ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி என்.­எஸ்.எஸ்., அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். தலைமையாசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். 2010-11ம் கல்வியாண்டில் 10, 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. மணிகண்டன் நன்றி கூறினார்.

* இத்தலார் லலிதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த விழாவில், ஆசிரியர் சசிகுமார் வரவேற்றார். பள்ளி முதல்வர் அர்ஜூணன் கொடியேற்றினார். பெம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி விழாவில், தலைமையாசிரியை கனகமணி வரவேற்றார். முன்னாள் தலைமை ஆசிரியர் கொங்க வாத்தியார் தலைமை வகித்தார். கிராம கல்வி குழு தலைவர் மாதன் முன்னிலை வகித்தார்.

* தூனேரி அகலார் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தாளாளர் அர்ஜுணன் கொடியேற்றினார். முதல்வர் வாசுகி அர்ஜுணன் பேசினார். மாணவ நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. இதில் மாணவர் தலைவர், துணை தலைவர், நான்கு அணி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் பதவியேற்றனர்.

*ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையில் நடந்த நிகழ்ச்சியில், தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்து கொடியேற்றினார். தொழிற் சங்கத்தினர் பங்கேற்றனர்.

* ஊட்டி பிரீக்ஸ் உயர்நிலைப்பள்ளியில் மாணவியர் தலைவி சங்கவி வரவேற்றார். தலைமை ஆசிரியை நஜ்மல் கொடியேற்றினார். சிறந்த ஆசிரியைக்கான விருது தமிழாசிரியை சிவகலாவுக்கும், சிறந்த நிர்வாகிக்கான விருது நஜ்மல் அன்வருக்கும் வழங்கப்பட்டது. ஆசிரியர் நேதாஜி நன்றி கூறினார்.

* ஊட்டி பர்ன்ஹில் கிளிப்ராக் அகாடமி பள்ளியில் நடந்த விழாவில் தாளாளர் சதீஷ்குமார், வீனா, ரவிச்சந்திரன் பங்கேற்றனர். 10ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளியின் முன்னாள் மாணவி காவியாவுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

* ஒய்.எம்.சி.ஏ., மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் தாளாளர் சார்லஸ் கொடியேற்றினார். ஒய்.எம்.சி.­ஏ., செயலாளர் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் பேசினார். பள்ளி சேர்மன் பாஸ்கர் சதாநந்த் பரிசுகள் வழங்கினார். சில்வியா நன்றி கூறினார்.

* நீலகிரி மாவட்ட காங்., கமிட்டி சார்பில் நடந்த விழாவில் கெம்பையா தலைமை வகித்தார். ஊட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

* ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பாக சி.எஸ்.ஐ., ஹோபார்ட் பள்ளியில் நடந்த விழாவில், துரை கண்ணன், சமன்குமார், பிரபு, சோலூர் கணேசன், மயில்வாகனன், பாலகிருஷ்ணன், பத்மகுமார், முரளி, பெள்ளி, உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டிமன்றம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

* ஊட்டி எச்.பி.எப்., இந்து ஆன்மீக சங்கம் சார்பில் நடந்த விழாவில், எச்.பி.எப்., நிர்வாக இயக்குனர் ஜெகதீஸ்வரன், பி.ஆர்.ஓ., பழனிசாமி, தலைவர் மோகன்ராஜ், செயலாளர் சந்திரசேகரன், மனோகரன் , மணிகண்டன், சந்திரமோகன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு யூனிபார்ம், பனியன்கள் வழங்கப்பட்டது.

* காந்தல் லட்சிய எழுச்சி முகமை சார்பில் நடந்த விழாவில், சங்க தலைவர் லாரன்ஸ் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் ஜெயகுமார், நாகராஜ், பிரபு, சுப்ரமணி, சகாயநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

குன்னூர்: குன்னூர் தேயிலை வாரியம் சார்பில் நடந்த விழாவில், தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன் கொடியேற்றினார். சிறு தேயிலை விவசாயிகளுக்கு சுழல் நிதி, மானியம் உட்பட 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

* கரன்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பர்லியார் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் கொடியேற்றினார். பள்ளி தலைமையாசிரியர் தன்ராஜ் வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மோகன் குமார் நன்றி கூறினார். மஞ்ச கம்பை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கிராம கல்விக் குழு தலைவர் முருகன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் கரியபெட்டன் வரவேற்றார்.

* குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில், மூத்த அலுவலக உதவியாளர் தைனீஸ் கொடியேற்றினார். தலைமையாசிரியர் ஜான்சன் தலைமை வகித்தார். ஆசிரியர் உலகநாதன் பேசினார். குன்னூர் பெட்டட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் மனோகரன் கொடியேற்றினார்.

* அருவங்காடு கோபாலபுரம் கிராம நற்பணி மன்றம், கோபாலபுரம் பொதுமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த விழாவில், ஊர் பிரமுகர் உசைன் கொடியேற்றினார். கிராம நற்பணி மன்ற செயலர் ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். நுகர்வோர் சங்க செயலர் ஜெயலட்சுமி, நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us