/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/"குடிகார' தந்தை அடித்துக் கொலைபோலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்புமகன் உள்பட 3பேர் கைது"குடிகார' தந்தை அடித்துக் கொலைபோலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்புமகன் உள்பட 3பேர் கைது
"குடிகார' தந்தை அடித்துக் கொலைபோலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்புமகன் உள்பட 3பேர் கைது
"குடிகார' தந்தை அடித்துக் கொலைபோலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்புமகன் உள்பட 3பேர் கைது
"குடிகார' தந்தை அடித்துக் கொலைபோலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்புமகன் உள்பட 3பேர் கைது
ADDED : ஆக 22, 2011 02:37 AM
திருநெல்வேலி:கூடன்குளத்தில் 'குடிகார' தந்தையை அடித்துக்கொன்று போலீசுக்கு
தெரியாமல் உடலை எரித்த மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கூடன்குளம் காந்திநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(50). கூலித்தொழிலாளி.
இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மகன்
விஜயக்குமார்(26) தந்தையுடன் வசித்துவந்தார். சுப்பிரமணியனுக்கு மது
குடிக்கும் பழக்கம் இருந்தது.அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில்
மனைவி, குடும்பத்தினரிடம் தகராறு செய்துவந்தார். இதை தட்டிக்கேட்ட மகன்
விஜயக்குமாரிடம் சுப்பிரமணியன் தகராறு செய்தார். கடந்த 19ம்தேதி இரவு
குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சுப்பிரமணியன் மனைவி, குடும்பத்தினரை
திட்டினார்.
இதை விஜயக்குமார் கண்டித்தார். உடனே சுப்பிரமணியன் கம்பால்
விஜயக்குமாரை தாக்கினார்.ஆத்திரமடைந்த விஜயக்குமார் தந்தை சுப்பிரமணியனை மண்வெட்டியால் தாக்கினார்.
சுப்பிரமணியன் படுகாயமடைந்தார். உடனே சுப்பிரமணியனை குடும்பத்தினர்
ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வெளியூர் ஆஸ்பத்திரிக்கு சுப்பிரமணியனை
கொண்டு செல்லும்படி டாக்டர் கூறினார். இந்நிலையில், சுப்பிரமணியன்
இறந்தார்.
இதுகுறித்து விஜயக்குமார் தன் உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.
குடும்பத்தினர் போலீசுக்கு தெரியாமல் சுப்பிரமணியன் உடலை தோட்டத்திற்கு
கொண்டு சென்று எரித்தனர். பின்னர் கூடன்குளம் வி.ஏ.ஓ., நாதன் இளங்கோவிடம்
விஜயக்குமார் சரண் அடைந்தார். வி.ஏ.ஓ., போலீசில் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், ஏட்டு எழில்குமார் விசாரணை நடத்தி
விஜயக்குமார், அவர் உறவினர்கள் முருகன், சுந்தரை கைது செய்தனர்.