கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை
சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் 60 பேர்
பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பிரிவைச் சேர்ந்த
சாலைப்பணியாளர் பொன்பாண்டியை கோட்டப் பொறியாளர் தகாத வார்த்தைகளிலும்,
தரக்குறைவாகவும் பேசியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு காரணமாக இருந்த கோட்ட பொறியாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டனர்.