ADDED : ஆக 05, 2011 01:25 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதிகளில் மழை தொடர்ந்து தூறல் மழையாக
பெய்து வருவதால், தென்னை மஞ்சி மில்களில் வேலை
நிறுத்தப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பகுதியில் தென்னை மட்டையில் இருந்து
மஞ்சியை பிரித்து எடுக்கும் மில்கள் அதிகளவில் துவங்கப்பட்டுள்ளன.
தாமரைக்குளம், தேவணாம்பாளையம் போன்ற பகுதிகளில் தென்னை மஞ்சியில் இருந்து
கயிறு திரிக்கும் தொழிலும் நடந்து வருகிறது.தற்போது, மழை தொடர்ந்து தூறல்
மழையாக பெய்து வருவதால், தென்னை மஞ்சியில் இருந்து பிரித்தெடுக்கும்
மஞ்சியை உலர வைக்க முடியாமல் மலைபோல் குவித்து வைத்துள்ளனர். இதனால், மஞ்சி
மில்களில் மஞ்சி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி இல்லாததால்,
கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.