/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாவட்ட சிலம்ப போட்டி சிவராம், அனுபிரபா வெற்றிமாவட்ட சிலம்ப போட்டி சிவராம், அனுபிரபா வெற்றி
மாவட்ட சிலம்ப போட்டி சிவராம், அனுபிரபா வெற்றி
மாவட்ட சிலம்ப போட்டி சிவராம், அனுபிரபா வெற்றி
மாவட்ட சிலம்ப போட்டி சிவராம், அனுபிரபா வெற்றி
ADDED : ஆக 01, 2011 10:34 PM
கோவை : மாவட்ட சிலம்பாட்ட போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோர் சிறுவர், சிறுமியர் பிரிவில் சிவராம், அனு பிரபா முதல் பரிசு பெற்றனர்.
மாவட்ட சிலம்பாட்ட சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் சபர்பன் மேல்நிலை பள்ளியில் நடந்தன. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 18 கிளப்புகள், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 160க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள், வீராங்கனைகள் 10, 14, 17, வயதுக்கு உட்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டியை கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் துவக்கி வைத்தார். போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோர் தவிர பிற பிரிவுகளில், போட்டியாளர்கள் அனைவரும் எடையின் அடிப்படையில்தேர்வு செய்யப்பட்டனர்.விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், 10 வயதுக்கு உட்பட்டோர் சிறுமியர் பிரிவில் அனு பிரபா, சிறுவரில் சிவராம் முதல் பரிசு பெற்றனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் 20 கிலோ பிரிவில் சிந்துஜா வெற்றி பெற்றார். 25, 30, 35, 40 கிலோ பிரிவுகளில் முறையே சௌமியா, ஹரி பிரபா, தேவதர்சினி, பிரதிக்ஷா முதலிடம் பெற்றனர். 40 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் ப்ரேமி வெற்றி பெற்றார். பெண்கள் 17 வயதுக்கு உட்பட்டோர் 30, 34, 38, 42, 46, 50, 60 கிலோ பிரிவுகளில் முறையே நர்மதா, அபினயா, புவனேஸ்வரி, சாருமதி, இந்துமதி, ருத்ரா தேவி, சங்கவி, தீபா முதல் பரிசை கைப்பற்றினர். 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பானுமதி வென்றார். ஆண்கள் பிரிவில், 14 வயதுக்கு உட்பட்டோர் 30, 35, 40 கிலோ பிரிவுகளில் முறையே நந்தகுமார், அனிஷ் பாலாஜி, சதீஸ் கெல்வின் முதலிடம் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை,கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் தெய்வம் வழங்கினார். இந்திய சிலம்பாட்ட சம்மேளன பொது செயலாளர் கேசவன், மாவட்ட சிலம்பாட்ட தலைவர் முத்துராஜ், செயலாளர் சையத் இப்ராகிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.