Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/விவசாயிகளுக்கு 14 வகையான வேளாண் இடுபொருள் வழங்கல்

விவசாயிகளுக்கு 14 வகையான வேளாண் இடுபொருள் வழங்கல்

விவசாயிகளுக்கு 14 வகையான வேளாண் இடுபொருள் வழங்கல்

விவசாயிகளுக்கு 14 வகையான வேளாண் இடுபொருள் வழங்கல்

ADDED : ஆக 26, 2011 01:16 AM


Google News
திருத்துறைப்பூண்டி: தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கலர் உவர் நில சீர்திருத்தத்துக்கான நில சீர்த்திகளான ஜிப்சம் மற்றும் தக்கை பூண்டு உட்பட 14 வகையான வேளாண் இடு பொருட்கள் 2.64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு தலைமை செயலக தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்ட ஆலோசகர் உமாசங்கர் வழங்கினார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை, பட்டுக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கலர் உவர் நில சீர்த்திருத்தமும், நெல் மகசூல் அதிகரிக்கும் திட்டம் திருவாரூர் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வேதாரண்யம், தாலுகாவில் 81 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்க திடல் நடந்து வருகிறது. இதில், 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கப்பட்டது. இத்திட்ட செயல்பாடு மற்றும் கள ஆய்வு பணியை தேசிய வேளாண் அபிவிருத்தி திட்ட ஆலோசகர் உமாசங்கர் கொற்கை மற்றும் சேகல் கிராமங்களில் கள ஆய்வு செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.வேளாண் துணை இயக்குனர் இளஞ்செழியன் இத்திட்டத்தினை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி தங்கள் கலர் நிலங்களை நல்ல நிலங்களாக மாற்றியும், பண்ணை கருவிகளை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்து வேலையாட்கள் செலவுகளை குறைத்து அதிக மகசூல் பெறுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். இத்திட்டத்தின் இணை திட் ட அலுவலர் பட்டுக்கோட் டை வேளாண் ஆராய்ச்சி நிலையம் மாரிமுத்து, இத்திட்ட செயல்பாடான கலர் நிலங்களை ஜிப்சம் அல்லது கரும்பு ஆலை கழிவை கொண்டு சீர்த்திருத்துவது, தக்கை பூண்டி வளர்த்து மடக்கி உளவு செய்தல், நெல் மகசூல் அதிகரிக்கும் வழி முறைகள் குறித்து எடுத்து கூறினார். கள ஆய்வில் திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை அலுவலர் தெய்வேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மகேஷ், ரமேஷ்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று திட்டத்தின் கீழ் அறுவடை இயந்திரம் பவர் வீடர் மற்றும் பண்ணையை சுற்றி வேலிகள் அமைக்க நிதியுதவி வழங்க வேண்டும் என்று திட்ட ஆலோசகரிடம் கோரிக்கை வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us