ADDED : ஜூலை 25, 2011 02:09 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மரப்பேட்டை நூலகத்தில் கடந்த 15 நாட்களாக தடைபட்டிருந்த மின் வினியோகம் தற்போது சீரானது.பொள்ளாச்சி மரப்பேட்டை நூலகத்தின் முன் இருக்கும் 'மே பிளவர்' மரத்தின் கிளை மின் கம்பத்தின் மேல் விழுந்தது.
இதையடுத்து கடந்த 15 நாட்களாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது. இங்கு அமைந்துள்ள மரத்தின் கிளைகள் வெட்டப்பட்ட பின் தான் மின் வினியோகம் செய்யப்படும். இல்லையென்றால் கிளை மீண்டும் கம்பத்தின் மேல் விழுந்து தேவையில்லாத விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மின்வாரியத்தினர் கூறினர்.இந்நூலகத்தில் ஜெனரேட்டர் வசதியில்லாததால், இரவு நேரத்தில் நூலகம் பூட்டப்பட்டது. இதை தொடர்ந்து, நகராட்சி சார்பில் இன்ஜினியர்கள் மின் கம்பத்துக்கு இடையூறாக இருந்த மரத்தின் கிளைகளை வெட்டினர். தற்போது நூலகத்துக்கு மின் வினியோகம் சீராக்கப்பட்டுள்ளது.