/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருஈங்கோய்மலை திருவள்ளுவர் மன்றத்தின் 51ம் ஆண்டு விழாதிருஈங்கோய்மலை திருவள்ளுவர் மன்றத்தின் 51ம் ஆண்டு விழா
திருஈங்கோய்மலை திருவள்ளுவர் மன்றத்தின் 51ம் ஆண்டு விழா
திருஈங்கோய்மலை திருவள்ளுவர் மன்றத்தின் 51ம் ஆண்டு விழா
திருஈங்கோய்மலை திருவள்ளுவர் மன்றத்தின் 51ம் ஆண்டு விழா
ADDED : ஜூலை 21, 2011 02:40 AM
தொட்டியம்: தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை திருவள்ளுவர் மன்ற 51ம் ஆண்டு விழா, விருது வழங்கும் விழா, 104வது திருக்குறள் முற்றோதல் விழா, 55வது ஈங்கோய்மலை எழுபது முற்றோதல் விழா நடந்தது.
விழாவில் திருவள்ளுவர் மன்ற அமைப்பாளர் பொன்னுசாமி வரவேற்றார். டாக்டர் மீராமோகன், லலிதா மகிளா சமாஜ சரஸ்வதி, பாலாம்பா சரஸ்வதி, நீதிமுத்துமணல், முன்னாள் கல்வித்துறை துணை இயக்குனர் புஷ்பநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் அறிவொளி தலைமை வகித்தார். முசிறி தமிழ்ச்சங்க செயலாளர் நித்யானந்தம், ஆசிரியர் குமாரலிங்கம், திருவள்ளுவர் மன்ற பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு ஆண்டறிக்கை வாசித்தார். டாக்டர் அறிவொளி தலைமை வகித்து திருஈங்கோய்மலை ஸ்ரீலலிதா மகிளா சமாஜ மாதாஜி வித்யாம்பா சரஸ்வதியின் சமூக தொண்டு, இறைத்தொண்டு ஆகியவற்றை பாராட்டி, 'மாதர்குல மணி விளக்கு' என்ற விருதை வழங்கி பேசினார். விழாவில், தமிழ்பேரவை பொருளாளர் சண்முகம், செயலாளர் கவிஞர் பெரியசாமி, ராமச்சந்திரன், பிரேம்குமார், ஞானமுத்து, கோபிநாத், மணிமாறன், பாரதி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


