திட்டக் குழு உறுப்பினர் செயலர் கடலூர் கோர்ட்டில் சாட்சியம்
திட்டக் குழு உறுப்பினர் செயலர் கடலூர் கோர்ட்டில் சாட்சியம்
திட்டக் குழு உறுப்பினர் செயலர் கடலூர் கோர்ட்டில் சாட்சியம்
ADDED : ஆக 12, 2011 03:11 AM
கடலூர்:லஞ்ச வழக்கு தொடர்பாக, மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலர், கடலூர் கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் சிராஜுதீன்; ஜல்லி வியாபாரி.
கடந்த 2008ம் ஆண்டு, விழுப்புரத்தில் இருந்து சீர்காழிக்கு, லாரியில் ஜல்லி ஏற்றிச் சென்றார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த, லால்புரம் அருகே வந்த போது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த, அப்போதைய சிதம்பரம் ஆர்.டி.ஓ., குழந்தைவேலு தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள், லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.ஜல்லி ஏற்றி வந்ததற்கான அனுமதிச் சீட்டில், திருத்தம் இருந்ததால், லாரியை பறிமுதல் செய்து, சிதம்பரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, லாரியை விடுவிக்க சிராஜுதீனிடம், ஆர்.டி.ஓ., குழந்தைவேலு 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக, அவர் கொடுத்த புகாரின்படி, கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிந்து, ஆர்.டி.ஓ.,வை கைது செய்தனர்.பின், கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு தொடர்பாக, அப்போதைய வருவாய்த் துறை செயலரும், தற்போதைய மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலருமான தனவேல், கடலூர் கோர்ட்டில் நீதிபதி சண்முகநாதன் முன்னிலையில், நேற்று ஆஜராகி ஒரு மணி நேரம் சாட்சியம் அளித்தார்.


