பெட்ரோல் விலை உயர்வுக்குதமிழக முதல்வர் கண்டனம்
பெட்ரோல் விலை உயர்வுக்குதமிழக முதல்வர் கண்டனம்
பெட்ரோல் விலை உயர்வுக்குதமிழக முதல்வர் கண்டனம்
ADDED : செப் 16, 2011 04:52 AM
சென்னை:''பெட்ரோல் விலையேற்றத்திற்கான மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது,'' என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை பற்றி சற்றும் சிந்திக்காமல் மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களின் விலையை அவ்வபோது உயர்த்தி வருகிறது.
கடந்த மூன்று மாதத்திற்கு முன், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதன் விளைவாக ஏற்பட்ட விலைவாசி உயர்வால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.தற்போது, பெட்ரோல் விலை 2.61 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ஆகியவைகளை பயன்படுத்தும் சாதாரண மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவர்.விலைவாசி ஏறி வரும் நேரத்தில், அதை குறைப்பதற்கான நடவடிக்கைக்கு பதிலாக, பெட்ரோல் விலையை உயர்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.