Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பஸ் ஸ்டாண்டு "கிளாக் ரூம்'ல் கூடுதல் கட்டணம் வசூல்

பஸ் ஸ்டாண்டு "கிளாக் ரூம்'ல் கூடுதல் கட்டணம் வசூல்

பஸ் ஸ்டாண்டு "கிளாக் ரூம்'ல் கூடுதல் கட்டணம் வசூல்

பஸ் ஸ்டாண்டு "கிளாக் ரூம்'ல் கூடுதல் கட்டணம் வசூல்

ADDED : செப் 16, 2011 01:21 AM


Google News

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள பொருள் பாதுகாப்பு அறையில் (கிளாக் ரூம்), கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு, திருச்சி, சேலம், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து, நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஜவுளி, மஞ்சள் கேந்திரமாக உள்ளதால், வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகம் வந்து செல்லுமிடமாக உள்ளது. பயணிகள் வசதிக்காக, பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சி சார்பில், பொருள் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு உள்ளது.



ஆண்டுதோறும் ஏலம் நடத்தப்பட்டு, பொருட்களை வைத்து செல்ல கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு, நடத்தப்படுகிறது. காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரையில் பொருள் பாதுகாப்பு அறை செயல்படும். பொருள் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே, முதலில் வசூலித்து வந்தனர். அதன் பின், தாமாகவே கூடுதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தனர். தற்போது, ஒரு சூட்கேஸ்க்கு 10 ரூபாய், குடும்பத்துடன் வந்து நான்கு பேக்கள் வைக்க 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்கு ஏதுவாக, பொருள் பாதுகாப்பு அறையின் முன்பக்கம் எழுதப்பட்டு இருந்த கட்டண விபரத்தையும் சுரண்டி விட்டனர். கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி தட்டிக் கேட்டால், தேவையெனில் பொருட்களை வையுங்கள்; அல்லது, வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என, கூறுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் இதுபற்றி தெரியாதது போல இருந்து விடுகின்றனர். இதனால் வெளியூர் பயணிகள் அவதிக்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பொருட்களை வைக்க அதிக கட்டணம் வசூலிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us